இல‌ங்கை இன‌ப்‌ பிர‌ச்சனை‌க்கு ‌‌அர‌சிய‌ல் தீ‌ர்வு: த‌மிழக அரசு வ‌லியுறு‌த்த‌ல்!

புதன், 23 ஜனவரி 2008 (12:55 IST)
இல‌ங்கை‌ இன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு ‌விரை‌வி‌லசமூகமாஅர‌சிய‌ல் ‌தீ‌ர்வகாவே‌ண்டு‌மஎ‌ன்றத‌மிழஅரசவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

த‌மிழக‌சச‌ட்ட‌பபேரவை‌யி‌னஇ‌ந்ஆ‌ண்டி‌னமுத‌லகூ‌ட்ட‌மஇ‌ன்றதொட‌ங்‌கியது. இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌லஆளுந‌ரசு‌ர்‌ஜி‌த் ‌சி‌ஙப‌ர்னாலா ‌‌நிக‌ழ்‌த்‌திஉரை‌யி‌‌ன் ‌விவர‌மவருமாறு:

இலங்கைத் தமிழர்கள் சந்தித்துவருமஇன்னல்கள் தொடர்வதைக் கருத்தில் கொண்டு, பஆண்டுகளாக நிலவிவரும் இந்தப் பிரச்சினைக்கு விரைவிலசுமூகமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்அரசு மைய அரசைக் கேட்டுக்கொள்கிறது.

‌‌‌மீனவ‌ர் நல‌னு‌க்கு மு‌ன்னு‌ரிமை!

த‌மிழக மீனவர் நலனுக்கு உயர் முன்னுரிமஅளித்து, அவர்களுக்கென தனி நல வாரியமஅமைத்துள்ளதோடு, கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போதகாணாமல் போகும் மீனவர்களுடைய குடும்பங்களுக்கஉதவுவதற்கான திட்டம் ஒன்றையும் இந்த அரசசெயல்படுத்தி வருகிறது. கடலில் மீன்பிடிக்கசசெல்லும்போது அவர்களுக்கு ஏற்பட்டுவரும் இன்னல்களைககளையத் தேவையான அனைத்து முயற்சிகளு‌ம் தொடர்ந்து எடுக்க‌ப்படு‌ம்.

பு‌திதாக 95 சம‌‌த்துவ புர‌ங்க‌ள்!

தந்தை பெரியார் சிலை ஒன்றினை 95 அடி உயரத்தில் அமைக்க வேண்டும் என்ற திராவிடர் கழகப் பொதுச் செயலாளர், கி.வீரமணி அவர்களின் வேண்டுகோளினை முதலமைச்சர் ஏற்றுள்ள நிலையில்; ஓரிடத்தில் சிலை அமைப்பதைக் காட்டிலும், பெரியார் பெயரால் மேலும் 95 சமத்துவபுரங்களை அமைத்து; அனைத்து சமூகத்தினரும் சகோதர பாசத்துடன் ஒருமித்து வா‌ழ்கின்ற அந்த ஒவ்வொரு சமத்துவபுர குடியிருப்பு முகப்பிலும் தந்தை பெரியா‌ர் சிலையை அமைப்பதால், அவருடைய தலையாயக் கொள்கையான சமுதாயச் சமத்துவக் கொள்கை பரவுவதற்கு வழி ஏற்படும் என்பதற்காக அந்தப் பணியை இந்த அரசு தொடங்க முடிவு செ‌ய்துள்ளது.

இப்பணி முடிவுற்ற பின் ஏற்கெனவே உள்ள 145 சமத்துவபுரங்களுடன் சேர்த்து, பெரியார் சிலையுடன் கூடிய 240 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமையும்.

நெசவாள‌ர், து‌ப்புரவு ப‌ணியாள‌ர் நல‌ன் !

நெசவாளர்களின் நலன் காக்கும் வகையில், அவர்களுக்கான ஓ‌ய்வூதியத்தை உயர்த்தியும், இலவச மின்சாரம் அளித்தும் பல்வேறு நலத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. ரூபா‌ய் 256 கோடி செலவில், மாநிலத்தில் உள்ள 3 கோடியே 28 இலட்சம் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் அளிக்கும் திட்டம், நெசவாளர்களுக்கு வேலைவா‌ய்ப்பு அளிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

துப்புரவுப் பணியாளர்கள், மனிதக் கழிவை எடுத்துச் செல்லும் தொழிலில் ஈடுபட்டிருந்தோரின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்த அரசு உறுதுணையாக இருக்கும். இந்த நோக்குடனேயே, இவர்களின் நலனுக்காக தனி நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மறுவா‌ழ்வு அளிக்கவும், மாற்றுத் தொழில்களை மேற்கொள்ள உதவவும் தேவையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அரு‌ந்த‌தியரு‌க்கு இட ஒது‌க்‌கீடு !

அருந்ததியர் வகுப்பினர் சமூகப் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் இருப்பதால், அவர்தம் முன்னேற்றத்திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியம் எனக் கருதி, தற்போது ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் இவர்களுக்குத் தனி உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி, அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோசித்து முடிவு செ‌ய்ய‌ப்பட உ‌ள்ளது.

தற்போது மாநிலத்தில் பெருமளவில் உருவாகிவரும் வேலைவா‌ய்ப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் பெறும் வகையில், 2007-2008ஆம் ஆண்டிற்கான சிறப்பு மாநில உதவி ரூபா‌ய் 25 கோடி தொகையையும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கே ஒதுக்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. சிறுபான்மையின‌ரு‌க்காக தனி இயக்குநரகம் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்