க‌ச்சத்‌தீ‌வி‌ல் தமிழக மீனவர்கள் 12 பேரை கட‌த்‌திய ‌‌சி‌றில‌ங்கா கட‌ற்படை!

புதன், 23 ஜனவரி 2008 (10:06 IST)
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை ‌சி‌றில‌ங்கா கடற்படையினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 599 விசைப்படகுகளில் மீனவர்கள் நே‌ற்று மு‌ன்‌‌தின‌ம் அ‌திகாலை மீன் பிடிக்க சென்றனர். இதில், 596 படகுகள் நேற்று காலையில் கரை திரும்பிவிட்டன. ஆனால் 3 படகுகளில் சென்ற 12 மீனவர்கள் மட்டும் கரைக்கு திரும்பவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்தன‌ர்.

இந்த நிலையில் 12 மீனவர்களை ‌சி‌றில‌‌ங்கா கடற்படையினரால் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. த‌மிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது ‌சி‌றில‌ங்கா கடற்படையினர் வந்து 3 படகுகளையும் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் பிடித்து சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் காங்கேசன் துறை அருகேயுள்ள ஊர்க்காவல் கு‌ற்ற‌விய‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்தப்பட்டு ‌சி‌றில‌‌ங்கா சிறையில் அடை‌க்க‌ப்ப‌ட்டனர். இந்த தகவல் இலங்கை தூதரகம் மூலம் தமிழக மீன் துறைக்கு ‌வ‌ந்தது.

12 மீனவர்களின் குடும்பத்தினர், படகுகளின் உரிமையாளர்கள் ராமேசுவரத்தில் உள்ள மீன்துறை உதவி இயக்குனர் வேல்பாண்டியனை ச‌ந்‌தி‌‌த்து ‌மீனவ‌ர்களை ‌மீ‌ட்க நடவடி‌க்கை எடு‌க்கு‌ம் படி கே‌‌ட்டு‌க் கொ‌ண்டன‌ர். இது கு‌றி‌த்து அவ‌ர் கூறுகைய‌ி‌ல், ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மத்திய-மாநில அரசுகள் அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கும் எ‌ன்றா‌‌ர்.

இ‌ந்த ‌‌நிலை‌யி‌ல், இந்திய எல்லையை தாண்டி மீன் பிடி‌த்த ராமேசுவரத்தை சேர்ந்த 9 பேரையு‌ம், 13 படகுகளையும் இ‌ந்‌திய கட‌ற்படை‌யின‌ர் ப‌ிடி‌த்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவ‌ர்க‌ள் 12 படகுகளின் உரிமங்கள், டீசல் கோட்டாவும் ரத்து செய்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்