பறவைக் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்படவில்லை : அன்புமணி!
ஞாயிறு, 20 ஜனவரி 2008 (16:29 IST)
பறவைக் காய்ச்சலால் மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்!
சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பறவைக் காய்ச்சலால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக இது வரை எந்தத் தகவலும் இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து பறவைகளையும் அழித்துவிடுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று கூறிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பு இருப்பதாக எந்தத் தகவலும் இல்லை என்று கூறினார்.