கருணாநிதி தலைமையில் 23ஆ‌ம் தே‌தி ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூட்டம்!

வெள்ளி, 18 ஜனவரி 2008 (09:59 IST)
ஜனவ‌ரி 23ஆ‌ம் தே‌தி தி.மு.க. தலைவரு‌ம், முதலமைச்சருமான கருணாநிதி தலைமையில் இ‌க்க‌ட்‌சி‌யி‌ன் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூ‌ட்டம் சென்னையில் நடக்கிறது.

தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதலாவது கூட்டம் வரு‌ம் 23ஆ‌ம் தேதி ஆளுன‌ர் உரையுடன் துவங்குகிறது. சட்டமன்றம் கூடும் போது, அந்தந்த கட்சிகளின் உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூட்டம் நடப்பது வழக்கமான நடைமுறையாகும். அதன்படி அ‌க்க‌ட்‌சி‌‌‌யி‌ன் ச‌ட்ட‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூட்டம் 23ஆ‌ம் தே‌தி நடக்கிறது.

இது குறித்து அரசு தலைமை கொறடா அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரு‌ம் 23ஆ‌ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. அப்போது, ‌தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்