துக்ளக் பத்திரிக்கை ஆண்டு விழாவில் கலந்து கொள்ள குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி இன்று சென்னை வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் உள்பட 100 பங்கேற்றனர். அப்போது, கோத்ரா வன்முறைக்கு காரணமான மோடியை உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். அப்போது அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் சென்னை மெமோரியல் ஹால் அருகே ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுச் செயலாளர் எஸ்.ஏ.காஜா மொய்தீன் தலைமையில் 50 பேர் கறுப்பு கொடி ஏந்திய ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.