உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 528 பதவிகளுக்கு பிப்ரவரி 20ஆ‌ம் தேதி இடைத்தேர்தல்!

சனி, 12 ஜனவரி 2008 (10:11 IST)
''உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு பிப்ரவரி 20ஆ‌ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும்'' என்று மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் கூ‌றினா‌ர்.

சேலம் மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆய்வு கூட்ட‌ம் கூட்டம் முடிந்ததும் மாநில தேர்தல் ஆணையர் டி.சந்திரசேகரன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 528 பதவிகள் காலியாக உள்ளன. அதன்படி, மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர் பதவி-2, ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் பதவி-15, பஞ்சாயத்து தலைவர் பதவி-39, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள்-425, நகராட்சி வார்டு உறுப்பினர்-5, மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர்கள்-6 மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 36 என மொத்தம் 528 காலி பதவிகள் உள்ளன.

அவைகளுக்கு பிப்ரவரி 20ஆ‌ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. பிப்ரவரி 1ஆ‌ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, அன்று முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் தொடங்குகிறது. 8ஆ‌ம் தேதி அன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். 9ஆ‌ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 11ஆ‌ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பபெற கடைசி நாள். 20ஆ‌ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 22ஆ‌ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகிறது எ‌ன்று ச‌ந்‌திரசேக‌ர் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்