இட ஒதுக்கீட்டிற்கு சாதி ஒரு முக்கியக் கூறு: தமிழக அரசு!
வியாழன், 10 ஜனவரி 2008 (19:44 IST)
கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின் போது இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சாதி ஒரு முக்கிய கூறாக இருந்தாலும் அதை மட்டுமே அடிப்படையாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
கடந்த 1980 ஆண்டு முதல் இவர்களுக்கு 68 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. 93 ஆவது அரசியல் அமைப்புச் சட்டத்திருத்தத்திற்குப் பிறகுதான், தனியார் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் (Tamil Nadu Backward Classes SC/ST (Reservation of seats in private educational institutions) Act 2006) கொண்டுவரப்பட்டது.
மேலும், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கு சாதி ஒரு முக்கியக் கூறு என்பதை மறுக்கவில்லை. அதே நேரத்தில் மற்ற முக்கியக் கூறுகளில் ஒன்றுதான் சாதியே தவிர, அது மட்டுமே முக்கியக் கூறல்ல" என்று தமிழக அரசு கூறியுள்ளது.