தமிழக அமைச்சரவையின் ஆலோசனை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் கொள்கை முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.
தமிழக அரசு சிமெண்ட் விலையை நேற்று குறைத்து அறிவித்தது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.200 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் இடைதரகர்கள் குறுக்கிட்டு முறைகேடுகள் செய்யாமல் இருக்க எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இம் மாத இறுதியில் துவங்க உள்ளது. அதில் ஆளுநர் பர்னாலா உரையாற்றுகிறார். இதற்காக தற்போது ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆளுனர் உரையை இடம் பெற வேண்டிய அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்டது.