புது‌ச்சே‌ரி பா.ஜ.க. தலைவரு‌க்கு கொலை ‌‌மிர‌ட்ட‌ல்!

புதன், 9 ஜனவரி 2008 (16:07 IST)
புது‌ச்சே‌ரி பார‌திய ஜனதா க‌ட்‌சி‌த் தலைவரு‌க்கு செ‌ல்பே‌சி மூல‌ம் கொலை ‌மிர‌ட்‌ட‌ல் ‌விடு‌த்த ம‌ர்ம நபரை காவ‌ல்துறை‌யின‌ர் தேடி வரு‌கி‌ன்றன‌ர்.

புது‌ச்சே‌ரி பார‌திய ஜனதா ‌க‌ட்‌சி‌த் தலைவராக இரு‌ப்பவ‌ர் எ‌ம்.‌ வி‌ஸ்வே‌ஸ்வர‌ன். இவ‌‌ர் நே‌ற்று இரவு நட‌ந்த இ‌ந்து மு‌ன்ன‌ணி கூ‌ட்ட‌‌த்‌தி‌ல் பே‌சி கொ‌ண்டிரு‌ந்தபோது அவரது செ‌ல்பே‌சி‌க்கு அழை‌ப்பு ஒ‌ன்று வ‌ந்தது. அ‌தி‌ல் பே‌சிய ம‌ர்ம நப‌ர், உ‌ன்னை து‌ண்டு து‌ண்டாக வெ‌ட்டி ‌வீ‌சி ‌விடுவே‌ன் எ‌ன்று கூ‌றி‌வி‌ட்டு அழை‌ப்பை து‌ண்டி‌‌த்து ‌வி‌ட்டா‌ன்.

இது கு‌றி‌த்து ‌வி‌ஸ்வே‌ஸ்வர‌ன் ஒ‌திய‌‌ஞ்சாலை காவ‌ல் ‌நிலைய‌‌த்‌‌தி‌ல் புகா‌ர் செ‌ய்தா‌ர். காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து அ‌ந்த ம‌ர்ம ந‌ம்பரை வை‌த்து ‌‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்