விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!

சனி, 5 ஜனவரி 2008 (15:25 IST)
''‌திருவ‌ண்ணாமலமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்தொட‌க்வேளா‌‌ண்மகூ‌ட்டுறவவ‌ங்‌கிக‌ளி‌ல் ‌விவசா‌யிகளு‌க்கு ‌ப‌யி‌ர்‌க்கட‌னவழ‌ங்க‌ககோ‌ரி அ.இ.அ.‌‌ி.ு.க. சா‌ர்‌பி‌லஜனவ‌ரி 7ஆ‌மதே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மநடைபெறு‌‌ம்'' எ‌ன்றஅ‌க்க‌ட்‌சி‌‌யி‌னபொது‌சசெயலாள‌ரஜெயல‌லிதகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌த்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அறிக்கையில், தி.மு.க. அரசு பதவியேற்றது முதல், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்குப் போதுமான அளவு பயிர்க் கடன் வழங்கப்படுவதில்லை என்றும், கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகைகள் முதிர்வு பெற்றிருந்தும் அவற்றை டெபாசிட்தாரர்களுக்கு திருப்பித் தருவதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது.

மேலும், இம்மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு அதிக அளவில் அரிசி கடத்தப்படுவதாகவும், இச்செயல் இம்மாவட்ட அமைச்சரின் ஆசியோடு நடைபெறுவதாகவும் பொது மக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

தி.மு.க. அரசு, விவசாயிகளுக்குப் போதிய அளவு பயிர்க் கடன் வழங்க வலியுறுத்தியும், கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள டெபாசிட் தொகைகளை முதிர்வடையும் காலத்தில் தாமதம் இன்றி திரும்பித் தர வலியுறுத்தியும், திருவண்ணாமலை மாவட்டத்தில் அரிசி கடத்தல் நடைபெறுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ஜனவ‌ரி 7ஆ‌மதேதி காலை 10 மணி அளவில், திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்றஜெயல‌லிதஅ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்