தனியார் கூரியர் ‌நிறுவன‌ங்களை வரைமுறைப்படுத்த புதிய சட்டம் :அமைச்சர் இராசா தகவல்!

Webdunia

புதன், 2 ஜனவரி 2008 (18:10 IST)
தனியார் கூரியர் ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் நடவடிக்கைகளை வரைமுறைப்படுத்த புதிய சட்டமொன்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

இது தொட‌ர்பாக‌ச் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று அவ‌ர் செய்தியாளர்களிடம் கூறுகை‌யி‌‌ல், "தனியார்கள் நடத்தி வரும் கூரியர் சேவைகளை வரைமுறைப்படுத்துவதற்கு தற்போது எந்த சட்டமும் இல்லை. எனவே, இந்த சேவைகளை வரைமுறைப்படுத்த வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும்.

தனியார் கூரியர் சேவையினால் தபால் துறைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. தற்போதைய போ‌ட்டிக‌ள் ‌நிறை‌ந்த சந்தை‌‌ச் சூழ‌லி‌ல் தனியார் கூரியர் நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவிற்கு தபால் துறையின் உள்கட்டமைப்பு சிறப்பாகவே உள்ளது. இது மேலும் நவீனப்படுத்தப்படும்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்