வேளா‌ண்துறை‌யி‌ல் 2,354 பேரு‌க்கு‌ப் பத‌வி உய‌ர்வு: த‌மிழக அரசு தகவ‌ல்!

Webdunia

ஞாயிறு, 30 டிசம்பர் 2007 (12:56 IST)
வேளாண் துறையில் நடப்பாண்டில் (2007-08) மட்டும் மொத்தம் 2,354 பேருக்கு பல்வேறு வகையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவு‌ம், பதவி உயர்வில் எவ்வித தேக்க நிலையும் இல்லை என்றும் த‌‌‌மிழஅரசதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொடர்பாக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வெளியிட்டு‌ள்ள செய்திக் குறிப்‌பி‌ல், "நடப்பு நிதியாண்டில் 33 வேளாண் துணை இயக்குநர்கள், 93 வேளாண் உதவி இயக்குநர்கள், 509 வேளாண் அலுவலர்கள் ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டில் 181 வேளாண் அலுவலர்கள், 16 தோட்டக்கலை அலுவலர்கள், ரசாயன பிரிவில் உள்ள 33 வேளாண் அலுவலர்கள் ஆகியோருக்கு உதவி இயக்குநர், தோட்டக்கலை உதவி இயக்குநர்களாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அது போல், 1022 உதவி வேளாண் அலுவலர்கள், வேளாண் பொறியியல் துறையில் 453 உதவி மண்வள பாதுகாப்பு அலுவலர்கள், 14 செயற்பொறியாளர்கள் ஆகியோரும் பதவி உயர்வு பெற்றனர். பதவி உயர்வு பெற்றவர்கள் வேளாண்மைத் துறையின் பல்வேறு திட்டங்கள், சலுகைகள் ஆகியவை உழவர்களுக்குச் சென்றடைய பாடுபட வேண்டும்" என்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலு‌ம், மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். அது போல், உழவர்களின் வாழ்க்கைத் தரமும் உயர வேண்டும். இதன் காரணமாக, வேளாண் துறையில் புதிதாக உருவாகும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்குப் போய்ச் சேர வேண்டியுள்ளது.

இதற்காக தற்போதுள்ள நிர்வாக அமைப்பு முறை மாற்றப்பட்டு வருகிறது. இதன்படி வேளாண்மை, அதன் சகோதர துறைகளான தோட்டக்கலை, விதைச் சான்றளிப்பு, வேளாண் விற்பனை, வேளாண் வணிகம் ஆகிய துறைகளில் தொழில்நுட்பங்கள் அனைத்தும் ஒன்றிய அளவில் ஒரே இடத்தில் கிடைக்க வகை செய்யப்படுகிறது.

வேளாண் அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டியுள்ளது. இதற்காக பதவி உயர்வில் இருந்த தேக்க நிலை அகற்றப்பட்டு வருகிறது எ‌ன்று‌ம் அமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்