ந‌ள்‌ளிர‌வி‌ல் கோ‌யிலை‌த் ‌திற‌ந்தா‌ல் போரா‌ட்ட‌ம்: இ‌ந்து மு‌ன்ன‌ணி எ‌ச்ச‌ரி‌‌‌க்கை!

Webdunia

ஞாயிறு, 30 டிசம்பர் 2007 (11:27 IST)
புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் கோயில்களைத் திறந்தால், அதை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநில அமைப்பாளர் நா. முருகானந்தம் வெளியிட்ட செய்திக் குறிப்‌‌பி‌ல், "புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் கோயில்களைத் திறப்பது ஆகம விதிகளுக்கு புறம்பானது. இந்துக்களின் காலக் கணக்கின்படி லீப் வருடமே கிடையாது.

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய வானசாஸ்திர நிபுணர்கள், கால கணக்கை தெளிவாக பிழையின்றி வகுத்துள்ளனர். சூரியகிரகணம், சந்திரகிரகணம், அமாவாசை என அனைத்தும் தெளிவாக உள்ளன.

இதன்படி சூரியன் உதயமாகும்போதுதான் நாள் உதயமாகிறது. மேலும் கோயிலில் பூஜை செய்யவேண்டி நேரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே நள்ளிரவில் கோயில்களைத் திறந்தால், அதை எதிர்த்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணி போராடும்" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்