மாநகரமானது ‌திரு‌ப்பூ‌ர்!

சனி, 29 டிசம்பர் 2007 (13:57 IST)
ப‌னிய‌‌னஏ‌ற்றும‌தி‌யி‌லமு‌ன்‌னிலவ‌கி‌ப்பதா‌லகு‌ட்டி ஜ‌ப்பா‌னஎ‌ன்றழை‌க்க‌ப்படு‌ம் ‌திரு‌ப்பூ‌ரஇ‌ன்றமுத‌லமாநகரா‌ட்‌சியானது.

தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 6 மாநகராட்சிகள் உள்ளன. இ‌த்துட‌னதிருப்பூர், ஈரோடு ஆ‌கிநகராட்சிகளை மாநகராட்சியாக தர‌மஉய‌ர்‌த்‌தி தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.

திரு‌ப்பூ‌ரபு‌திபேரு‌ந்து ‌நிலைய‌மஅரு‌கி‌லஇ‌ன்றகாலை 10 ம‌ணி‌க்கநட‌ந்த ‌விழா‌வி‌ல், மாநகராட்சியை தொடங்கி வைப்பதன் அடையாளமாக அதனுடைய நினைவு தூணை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

திருப்பூர் நகராட்சி தலைவராக இருக்கும் செல்வராஜ், மாநகராட்சி மேயராக பதவி ஏற்றதால் அவருக்கு மேயருக்கான அங்கியினையும், செங்கோலினையும் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

நல‌த்‌தி‌ட்ட உத‌விக‌ள்!

இதையடு‌த்தமுதல்வர் கருணாநிதி, திருப்பூர் நகராட்சி பள்ளிக‌‌ளி‌ல் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 40 லட்சம், நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி‌யி‌ல் ரூ.2 கோடியே 90 லட்சம், பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி‌யி‌ல் ரூ.2 கோடி, குமார் நகர் பள்ளி‌யி‌ல் ரூ.80 லட்சம் ஆ‌கிசெலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன.

திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடி செலவில் திறந்தவெளி கலையரங்கம் கட்டுதல், புதுராமகிருஷ்ணா புரம் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு ரூ.53 லட்ச‌ம் செல‌வி‌ல் 2-வது குடிநீர் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்ட‌ம், ஈஸ்வரமூர்த்தி மகப்பேறு மருத்துவமனையில் ரூ.45 லட்சம் செலவில் அறைகள் கட்டும் திட்டம் என மொத்தம் ரூ.9 கோடியே 8 லட்சத்துக்கான நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் நகராட்சியில் அங்கீகரிக்கப்பட்ட 27 குடிசை பகுதிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 60 பயனாளிகளுக்கு புதிய குடியிருப்புகள் கட்டவும், குடியிருப்புகளை மேம்பாடு செய்யவும் மற்றும் குடிசை பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்யவும், மத்திய- மாநில அரசுகளால் ரூ.20 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புக்கான சாவியையும் மற்றும் மானிய தொகைக்கான காசோலைகளையும், பயனாளி அடையாள அட்டைகளையும் முத‌ல்வ‌ர் கருணாநிதி வழங்கினார்.

விழாவுக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் நிரஞ்சன் மார்டி வரவேற்று பேசினார்

தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி, கோவை எம்.பி. சுப்பராயன், திருப்பூர் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசு செயலாளர் தீனபந்து ஆகியோர் வாழ்த்தி பேசினர். திருப்பூர் மாநகராட்சி மேயர் செல்வராஜ் ஏற்புரையாற்றினார். இறு‌தியாக கோவை மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் நீரஜ்மித்தல் நன்றி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்