வேலூர், திண்டுக்கல் மாவட்ட‌ங்களுக்கு ரூ.1.54 கோடி நிதியுதவி!

Webdunia

சனி, 29 டிசம்பர் 2007 (12:00 IST)
மத்திய அரசின் வறட்சிக்கு இலக்காகும் பகுதிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் வேலூர், ‌தி‌ண்டு‌க்க‌லமாவட்ட மேம்பட்டுப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.1.54 கோடி வழங்கியுள்ளது.

மத்திய அரசின் வறட்சிக்கு இலக்காகும் பகுதிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தவணை முறையில் மாவட்ட வாரியாக நிதியுதவி வரு‌ங்க‌ப்ப‌ட்டவரு‌கிறது. தற்போது வேலூர் மாவட்டத்தில் 15 திட்டப் பணிகளுக்காக ரூ.1 கோடியே 78 ஆயிரத்து 500-ஐ மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில் 8 மேம்பாட்டு திட்டப் பணிகளுக்காக ரூ.53.86 லட்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் ஆத்தூரில் 3 திட்டங்களும், கொடைக்கானலில் 3 திட்டங்களும், நத்தத்தில் 2 திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்