மெ‌ட்‌ரி‌க்குலேச‌ன், ஆ‌ங்‌கிலோ இ‌ந்‌திய‌ன் பாட‌த்‌தி‌ட்ட‌த்‌திலு‌ம் 10 ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வு‌க்கு மொ‌த்த ம‌தி‌ப்பெ‌ண் 500 : த‌மிழக அரசு உ‌த்தரவு!

சனி, 29 டிசம்பர் 2007 (11:27 IST)
சம‌ச்ச‌ீ‌ர் க‌ல்‌வி‌த் ‌தி‌ட்ட‌த்‌தை அம‌ல்படு‌த்துவத‌ற்கான முத‌ல் நடவடி‌க்கையாக எஸ்.எஸ்.எல்.சி.யைப் போலவே மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் பாடத்திட்டங்களிலும் 10-ஆம் வகுப்பு பொது‌த் தே‌ர்‌வி‌ல் மொத்த மதிப்பெண்கள் 500 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த மதிப்பெண் முறை உடனடியாக அமலுக்கு வருகிறது.

இது குறித்து த‌மிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு‌ள்ளதாவது:

மாநில பாடத்திட்டத்தில் (எஸ்.எஸ்.எல்.சி.) 500 மதிப்பெண்களுக்கும், ஓரியண்டல் பாடத்திட்டத்தில் 600 மதிப்பெண்களுக்கும், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தில் 1100 மதிப்பெண்களுக்கும், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டத்தில் 1000 மதிப்பெண்களுக்கும், என மொத்த மதிப்பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் சுமார் 6.5 லட்சம் மாணவர்களும், மெட்ரிக் பாடத்திட்டத்தில் சுமார் 1.1 லட்சம் மாணவர்களும், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டத்தில் சுமார் 5,000 மாணவர்களும், ஓரியண்டல் பள்ளிகளில் 1,500 மாணவர்களும் பயின்று தேர்வு எழுதுகின்றனர்.

மாநில பாடத்திட்டத்தில் பயிலுவோர் எண்ணிக்கையே அதிகமாகும். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புற பள்ளிகளில் படிக்கின்றனர். 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் இளவயதினை கருத்தில் கொண்டும், 84.85 சதவீத மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் படிப்பதாலும், மத்திய அரசின் பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.சி.) பள்ளி இறுதித்தேர்வில் மொத்த மதிப்பெண் 500 ஆக இருப்பதையும் கருத்தில் கொண்டு அனைத்து வகை பாடத்திட்டங்களிலும் மொத்த மதிப்பெண்கள் 500 என நிர்ணயித்து ஒரே சீரான சான்றிதழ்கள் வழங்கலாம் என்று அரசு முடிவு செ‌ய்து‌ள்ளது.

அதன்படி தற்போது உள்ள பாடத்திட்டம், பாடப்புத்தகங்கள், தேர்வுத் தாள்களின் எண்ணிக்கை, வினாத்தாள் அமைப்பு ஆகியவற்றில் எவ்வித மாறுதலும் செய்யாமல், ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் உள்ள மொத்த மதிப்பெண்கள் 500 என இருக்கும் வகையில் பாட வாரியாக மதிப்பெண்களை மாற்றம் செய்து ஒரே சீரான மார்க் வழங்கலாம் என்றும், இதன்படி அனைத்து வகை பாடத்திட்டத்தில் படிப்போருக்கும் ஒரே சீரான 500 மொத்த மதிப்பெண்கள் கொண்ட சான்றிதழ்கள் வழங்கலாம் எனவும் அரசு முடிவு எடுத்து உள்ளது.

மேற்படி மாற்றம் செய்வது குறித்து கருத்துக்களைப் பெற 12.10.2007-ல் மாநில திட்ட, மெட்ரிக், ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் சார்ந்த முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு வந்திருந்தோரில் ஏறக்குறைய அனைவருமே மாற்றத்தை வரவேற்றனர். இந்த திட்டத்துக்கு மாநில திட்டக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து அரசாணை வெளியிடப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து, பள்ளி கல்வித்துறை செயலாளர் குற்றாலிங்கத்திடம் கேட்டபோது, "தேர்வு நடைமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை. மாநில பாடத்திட்டத்துக்கு 500 மதிப்பெண்களுக்கும், ஓரியண்டல் பாடத்திட்டத்தில் 600 மதிப்பெண்களுக்கும், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தில் 1100 மதிப்பெண்களுக்கும், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டத்தில் 1000 மதிப்பெண்களுக்கும் வழக்கம் போல் கேள்விகள் கேட்கப்படும். ஆனால், மாணவர்கள் எடுக்கும் மார்க்குகள் 500-க்கு எவ்வளவு என்று கணக்கிட்டு சான்றிதழ்களில் குறிப்பிடப்படும்.

இந்த நடைமுறை வருகிற மார்ச் மாத தேர்வில் இருந்து அமலுக்கு வருகிறது'' என்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்