செ‌ங்க‌ம் அரு‌கி‌ல் லா‌ரி- ஆ‌ட்டோ மோத‌ல்: 4 பே‌ர் ப‌லி!

Webdunia

வெள்ளி, 28 டிசம்பர் 2007 (13:51 IST)
திருவ‌ண்ணாமலை மாவ‌ட்ட‌ம் செ‌ங்க‌ம் அரு‌கி‌ல், மே‌ல்மருவ‌த்தூ‌ர் கோ‌விலு‌க்கு‌ச் செ‌ன்று‌வி‌ட்டு ஆ‌ட்டோ‌வி‌ல் ‌‌திரு‌ம்‌பி‌க் கொ‌ண்டிரு‌ந்த ப‌க்த‌ர்க‌ளி‌ன் ‌மீது லா‌ரி மோ‌திய ச‌ம்பவ‌த்‌தி‌ல் 4 பே‌ர் ப‌லியா‌யின‌ர். 9 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

திருவண்ணாமலை, தித்தாண்டபட்டு பஞ்சாயத்து, வலசை கிராமத்தை சேர்ந்த 30 பேர், நேற்று 2 மினி ஆட்டோ‌க்க‌ளி‌ல் புறப்பட்டு மேல் மருவத்தூர் கோவிலுக்கு சென்றனர். சா‌மி த‌ரிசன‌த்து‌க்கு‌ப் பின்னர் இன்று அதிகாலை வலசை கிராமத்துக்கு திரும்பினர்.

இ‌ன்று அதிகாலை 5 மணியளவில் 2 ஆட்டோக்களும் செங்கம் அரு‌கி‌ல் உ‌ள்ள அம்மாபாளையம் சாலை‌யி‌ல் சென்று கொண்டிருந்தன. அதிகாலை நேரம் என்பதால் மினி ஆட்டோவில் இருந்தவர்கள் அனைவரு‌ம் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்

அப்போது, எதிரே பெங்களூரில் இருந்து கள்ளகுறிச்சிக்கு காய்கறி ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக 2-ஆவதாக வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதில் ஆட்டோ சின்னாபின்னமாக நொறுங்கியது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி மாதேஸ்வரி (30), கல்யாணி(40), சம்பத் (30) பட்டம்மாள் (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலு‌ம் 9 பேர் படுகாயமடை‌ந்தன‌ர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களு‌ம், மற்றொரு ஆட்டோவில் சென்றவர்களும் ஓடி வந்து காயமடை‌ந்தவ‌ர்களை மீட்டு செங்கம் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றிய தகவல் கிடைத்ததும், செங்கம் காவ‌ல்துறை கூடுத‌ல் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் முருகன், பாய்ச்சல் சா‌ர்பு ஆ‌ய்வாள‌ர் கார்த்திகேயன், தலைமை‌யிலான காவல‌ர்க‌ள் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான லாரியையும் ஆட்டோவையும் அப்புறப்படுத்தி ‌விசாரணை நட‌த்‌தின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்