இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படைகளுக்கும் இடையில் கடுமையான மோதல் நடந்து வருவதால், தமிழகமீனவர்கள் யாரும் நமது கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கடற்படையினர் எச்சரித்துள்ளனர்.
ராமேசுவரம், முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி, பிரப்பன் வலசை பகுதிகளில் உள்ள காவல் சோதனை சாவடிகளில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வாகனங்களும் தீவிர கண்காணிப்புக்கு பிறகே கடலோரங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
இந்திய கடற்படையின் ரோந்து கப்பல்கள் கடல் எல்லையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. அவர்களுடன் கடலோர பாதுகாப்பு படையினரும் ரோந்து சுற்றி வருகின்றனர். இதுதவிர கடற்கரையில் கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் சுங்கத்துறை னருடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் நடமாடும் எல்லாப் படகுகளும் கண்காணிக்கப்படுகின்றன. சந்தேகப்படும் படகுகளை கடலோர பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.