புலிகள் – சிறிலங்கா கடல் போர்: த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் கரை ‌திரு‌ம்‌பின‌ர்!

Webdunia

வியாழன், 27 டிசம்பர் 2007 (15:10 IST)
இல‌ங்கை‌யி‌ல் ‌விடுதலை‌‌பபு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்கப்பற்படைக்கும் இடை‌யி‌லகடலில் கடும் சண்டை கு‌றி‌த்து இ‌ந்‌‌திய‌ககட‌ற்படை‌யின‌ரஉ‌ரிநேர‌த்‌தி‌லஎ‌ச்ச‌ரி‌த்ததஅடு‌த்து 200‌க்கு‌‌மமே‌ற்ப‌ட்த‌மிழக ‌மீனவர்க‌ள் ப‌த்‌திரமாகரை ‌திரு‌ம்‌பின‌ர்.

ராமே‌ஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு 50 படகுகளில் செ‌ன்ற 200‌க்கு‌ம் மே‌‌ற்ப‌ட்மீனவர்கள் இ‌ன்று காலை கரை ‌திரு‌ம்‌பின‌ர்.

அவர்களில் சேசு என்ற மீனவர் கூறுகையில், "நடுக்கடலில் இந்திய கடற்படையினர் எங்களிடம் கேட்டு கொண்டதற்கு இணங்க நாங்கள் வெகுதூரம் செல்லாமல் இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் காதை பிளக்கும் பீரங்கி சத்தம் கேட்டது. குண்டுகள் ஒளிப்பிழம்பாக சீறிப் பாய்ந்தன. இதுவரையில் இப்படி ஒரு காட்சியை கடலில் கண்டதில்லை. இதை பார்த்ததும் உடனே கரைக்கு திரும்பி விட்டோம்." என்றார்.

மு‌ன்னதாக, நேற்றிரவு இந்திய- இலங்கை எல்லை பகுதியில் இலங்கை ராணுவத்தினர் பீரங்கி தாக்குதல் நடத்தியதுட‌ன் சரமாரியாக குண்டு மழை பொழிந்தனர். இந்த சண்டையை‌த்தா‌ன் ராமேசுவரம் மீனவர்கள் நேரில் பார்த்துள்ளதாக‌த் தெ‌ரி‌கிறது.

இதையடு‌த்து, இந்திய கடலோரத்தில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. எல்லையில் 3 போர்க் கப்பல்கள் கண்காணிப்பு ப‌ணி‌யி‌லஉ‌ள்ளன. உச்சிப்புளி, மண்டபம் உள்ளிட்ட பகுதியில் ஹெலிகாப்டர்க‌ள் தாழ்வாக பறந்து பாதுகாப்பு பணிய‌ி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்