திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாரத் கிசான் சங்கத்தின் தலைவர் சங்கிலி முத்து தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற விவசாயிகள், மேல் சட்டை அணியாமல் உடல் முழுவதும் நாமம் போட்டுக் கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.
தாமதமின்றி நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1,000 குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். முன்னதாக வ.உ.சி. சாலை சந்திப்பிலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பேரணியாக புறப்பட்டு வந்தனர்.