பொ‌ங்க‌ல் ப‌ண்டிகை‌க்கு 25 வ‌ண்ண‌ங்க‌ளி‌ல் இலவச சேலை!

புதன், 26 டிசம்பர் 2007 (15:48 IST)
பொ‌ங்க‌ல் ப‌ண்டிகையை மு‌ன்‌னி‌ட்டு த‌மிழக அர‌சி‌ன் சா‌ர்‌பி‌‌ல் இலவச வே‌ட்டி- சேலை ‌வி‌னியோக‌ம் 1 ஆ‌ம் தே‌தி தொட‌ங்கு‌கிறது. இ‌ந்த ஆ‌ண்டு 25 வ‌ண்ண‌ங்க‌ளி‌ல் சேலைக‌ள் வழ‌ங்க‌ப்பட உ‌ள்ளன எ‌ன்று கோ ஆ‌ப் டெ‌க்‌ஸ் ‌நிறுவன‌த்‌தி‌ன் ‌நி‌ர்வாக இய‌க்குந‌‌‌ர் ‌நி‌ர்மலா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இது தொட‌ர்பாக இ‌ன்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், "இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் ரூ.256 கோடி மதிப்புள்ள 1.64 கோடி இலவச வேட்டிகளையும், 1.64 கோடி இலவச சேலைகளையும் கோ-ஆப் டெக்ஸ் வினியோகித்து உ‌ள்ளது.

அந்த மாவட்ட ஒதுக்கீட்டின்படி இலவச வேட்டி- சேலைகளை வருவாய்த்துறை, பொது வினியோகத் துறையினருக்கு வழங்கும் பணி கடந்த 15-ஆ‌ம் தேதி தொடங்கியது. இதுவரை 75 ‌விழு‌க்காடு வேட்டி-சேலைகள் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. வருகிற 31-ஆ‌ம் தேதிக்குள் இ‌ப்பணிக‌ள் நிறைவடையும்.

இந்த ஆண்டு முதல் முறையாக சிவப்பு, பச்சை, மஞ்சள், பிரவுன் உள்ளிட்ட 25 வண்ணங்களில் இலவச சேலைகளை கோ-ஆப் டெக்ஸ் தயாரித்து வழங்கியுள்ளது" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்