பு‌த்தா‌ண்டு கொ‌ண்டா‌ட்ட‌ங்களு‌க்கு‌த் தடை: இ‌ந்து ம‌க்க‌ள் க‌ட்‌சி கோ‌ரி‌க்கை!

செவ்வாய், 25 டிசம்பர் 2007 (18:40 IST)
புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்னும் பெயரில் மது விருந்துகளும், ஆபாச நடனங்களு‌ம் நட‌ப்பதை‌த் தடு‌க்க வேண்டு‌ம் எ‌ன்று இ‌ந்து ம‌க்க‌ள் க‌ட்‌சி கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் குமார் ‌விடு‌த்து‌ள்ள அறிக்கை‌யி‌ல், "தமிழகத்தில் அண்மை காலமாக நாகரீகம் என்னும் பெயரில் கலாச்சார சீரழிவுகள் நட‌க்‌கி‌‌ன்றன. பெரும்பாலான விடுதிகளில் புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்னும் பெயரில் மது விருந்துகளும், ஆபாச நடனங்களும் அதிக அளவில் நட‌க்‌கின்றன. இது தமி‌ழ் கலாச்சாரத்திற்கு உகந்தது அல்ல.

அதுபோல புத்தாண்டு இரவு இரு சக்கர வாகனங்களில் குடிபோதையில் வருவோர் புத்தாண்டு வாழ்த்து என்னும் பெயரில் சாலைக‌ளி‌ல் கூச்சலிடுவது, இளம் பெண்களை கேலி கிண்டல் செய்வது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் காவல்துறை கண்காணிக்க வேண்டும்.

ஆபாச நடனங்கள், மது விருந்துகள் நட‌க்கு‌ம் ‌விடு‌திக‌ளி‌ன் நிர்வாகத்தின் மீதும், சாலைகளில் ஈவ் டீசிங் போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது‌ம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டம் என்னும் பெயரில் ஆகம விதிமுறைகளுக்கு மாறாக இரவு 12 மணிக்கு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நட‌ந்து வருகி‌ன்றன.

முதல் நாள் இரவு கோவில் நடை மூடியபிறகு மறுநாள் அதிகாலை பூஜைக்குத்தான் கோவில் நடை திறக்கப்பட வேண்டும். அதை மீறி புத்தாண்டு சிறப்பு பூஜை என்னும் பெயரில் இரவு 12 மணிக்கு கோவில் நடை திறந்து பூஜைகள் மேற்கொள்ளுவதை இந்து மக்கள் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்