நா‌ங்க‌ள் தலைமையே‌ற்றா‌ல் கூ‌ட்ட‌ணி‌க்கு‌த் தயா‌ர்: ‌விஜயகா‌ந்‌த்!

செவ்வாய், 25 டிசம்பர் 2007 (16:20 IST)
'எங்கள் தலைமையை ஏற்று கூட்டணி அமைக்க யார் மு‌ன்வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்' எ‌ன்று தே.மு.‌‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் கூ‌றி‌னா‌ர்.

இது தொட‌ர்பாக‌ச் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டத‌ற்கு ப‌தில‌ளி‌த்த அவ‌ர், "தே.மு.தி.க.வைப் பொறுத்தவரை தனித்தே போட்டியிடுவோம் என்று ஆரம்பத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன். எங்கள் தலைமையை ஏற்று கூட்டணி அமைக்க யார் மு‌ன்வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். முதலில் எந்த கட்சி வருகிறது என்று பார்ப்போம். அதன் பிறகு யோசிப்போம்" எ‌ன்றா‌ர்.

குஜரா‌த் ப‌ற்‌றி‌க் கே‌ட்டத‌ற்கு, "குஜராத் தேர்தல் முடிவு நரேந்திர மோடிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அவர் குஜராத் மக்களுக்கு நல்லது செய்ததால் வெற்றி பெற்றுள்ளார். மதத்தை வைத்து அரசியல் கட்சிகள் சண்டை போடக்கூடாது. எனவேதான் நாங்கள் 3 மத விழாக்களை கொண்டாடுகிறோம். இதேபோல் எல்லா கட்சிகளும் கொண்டாட வேண்டும்" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், “பேராசிரியர் பொன்னுசாமி அவராகவே எங்கள் கட்சிக்கு வந்தார். இப்போது அவராகவே சென்று இருக்கிறார். அதைப் பற்றி கவலையில்லை.

மதுரையில் நடைபெற்ற சம்பவம் தி.மு.க.வின் திட்டமிட்ட சதி. எங்கள் கட்சி வளர்ந்து வருவதை பொறுக்க முடியாமல் இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுகிறார்கள். இரண்டு கட்சிகளுக்கு ஒரே நேரத்தில் அனுமதி வழங்கியது காவல்துறை. இந்த மோதலை காவல்துறை நினைத்திருந்தால் தடுத்து இருக்கலாம். இந்த மோதல் தொடர்பாக எங்கள் கட்சியோ அ.தி.மு.க.வோ புகார் செய்யவில்லை.

ஆனால் எங்கள் தொண்டர்கள் மீது பொய் புகார் பெற்று பொய்யாகவே வழக்கு ஜோடித்து கைது செய்து இருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. பொதுமக்கள் நலன் கருதி யாரோ புகார் செய்ததாக கூறுகிறார்கள். புகார் செய்தது யார் என்று விசாரித்தால் உண்மை தெரியவரும்" எ‌ன்றா‌ர் ‌விஜயகா‌ந்‌த்.

முன்னதாக நடிகர் விஜயகாந்த் பாரிமுனையில் உள்ள அந்தோணியார் ஆலயத்திற்கு தனது மனைவி பிரேமலதாவுடன் சென்று கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் கலந்து கொண்டார். பின்னர் பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி ஆலயத்துக்கும் சென்று பிரார்த்தனையில் கலந்து கொண்டார். அங்கு ஏழைகளுக்கு பிரியாணி வழங்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்