தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 20 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குஜராத்தில் பா.ஜ.க. பெற்றுள்ள அமோக வெற்றி காங்கிரசின் வீழ்ச்சியையே காட்டுகிறது என்றார்.
2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும் என்றும், அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றும் வைகோ கூறினார்.