மழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், கடலூர் உட்பட 13 மாவட்டங்களில் 10,650 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் சேதமடைந்து உள்ளதாகவும், 62 பாலங்களும், 1400 சிறுபாலங்களும் பழுதடைந்துள்ளதாகவும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இவற்றை தற்காலிகமாகச் சரி செய்வதற்கு ரூ.187 கோடி தேவைப்படும் என்றும், நிரந்தர சீரமைப்பு பணிக்கான மதிப்பு ரூ.702 கோடி என்றும் விவரம் தெரிவிக்கப்பட்டது.
முதல் கட்ட மதிப்பீடுகளின்படி ஒட்டுமொத்தமாக சுமார் ரூ. 1500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக இன்றைய தினம் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.