தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்சிக்கு சிறப்பு இரயில்: இன்று முன்பதிவு துவ‌க்க‌ம்!

Webdunia

வெள்ளி, 21 டிசம்பர் 2007 (10:47 IST)
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு இரயிலுக்கான முன்பதிவு இன‌்று துவ‌ங்‌கியு‌ள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை( சனிக்கிழமை) மற்றும் 29, 5, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (வ.எண் 0630) திருச்சியில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

மறுமார்க்கம், சென்னையில் இருந்து 27ஆ‌ம் தேதி, ஜனவரி 3, 10, 17ஆ‌ம் தேதிகளில் திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்( 0629) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு திருச்சியை சென்றடையும். அதே போல், சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு 23ஆ‌ம் தேதி, 30ஆ‌ம் தேதி, ஜனவரி 6, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0649) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

மறுமார்க்கம், நாகர்கோவிலில் இருந்து 24, 31 மற்றும் ஜனவரி 7, 14ஆ‌ம் தேதிகளில் சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0650) நாகர்கோவிலில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

சென்னையில் இருந்து 25ஆ‌ம் தேதி மற்றும் ஜனவரி 1, 8, 15ஆ‌ம் தேதிகளில் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (வ.எண் 0685) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

மறுமார்க்கம், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 26ஆ‌ம் தேதி, ஜனவரி 2, 9, 16ஆ‌ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (வ.எண் 0686) தூத்துக்குடியில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் சிறப்பு ரயில் (0686) கூடுதலாக மாம்பலத்தில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று (21ஆ‌ம் தே‌தி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது எ‌ன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்