அமராவதி அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள எச்சரிக்கை!

Webdunia

வியாழன், 20 டிசம்பர் 2007 (18:07 IST)
தொடர்மழையால் அமராவதி அணை நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் ஈரோடு மாவட்டம் தாராபுரம் மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரி‌க்கை விடப்பட்டுள்ளது.

அமராவதி அணையின் நீ‌‌ர்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது. மேலும் அமராவதியின் துணை ஆறுகளாக குதிரையாறு, பரப்பலாறு, பாலாறு, பொருந்தலாறு, வரதமாநதி, கொடகனாறு ஆகியவைகளின் நீர்பிடிப்ப பகு‌திகளிலும் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்யும் கன மழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அமராவதியில் கலக்கும் குதிரையாறு அணை மொத்தமுள்ள 80 அடியில் 79.93 அடியாக நீர் மட்டம் உயர்ந்து‌ள்ளது. பரப்பலாறு அணை மொத்தமுள்ள 90 அடி நிரம்பியது. வரதமாநதி அணையிலிருந்து ஏழாயிரத்து 566 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
அமராவதி அணை நிரம்பியதா‌ல் ஈரோடு மாவட்டம், தாராபுரம் ம‌ற்று‌ம் ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்