வேன்- பேரு‌ந்து நேருக்கு நேர் மோதல்: 5 பே‌ர் ப‌‌லி!

Webdunia

வியாழன், 20 டிசம்பர் 2007 (18:06 IST)
ஈரோடு அருகே வேனு‌ம், அரசு பேரு‌ந்து‌ம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஐந்து வாலிபர்கள் உடல் நசுங்கி இறந்தனர்.

ஈரோடு காந்திஜி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (27). தொழிலதிபர். இவர் நான்கு நாட்களுக்கு முன் ஸ்கார்பியோ வேன் வாங்கினார். வேனில் இவர் நண்பர்கள் மாணிக்கம்பாளையம் தினகரன் (33), ஈஸ்வரமூர்த்தி (33), மூலப்பாளையம் சக்திவேல் (36), கரூர் சங்கர் (33), சுந்தரமூர்த்தி (33) ஆகியோருடன் கோவை சென்றார். ஈரோடு மேட்டுக்கடை அருகே சீராப்பள்ளம் அருகே சாலை‌யி‌ல் மழைநீர் ஓடியதால், அதை தவிர்க்க வலப்புறமாக வேனை ஓட்டினார்.

அ‌‌ப்போது திருப்பூரில் இருந்து வந்த அரசு பேரு‌ந்துட‌ன் வேன் நேருக்கு நேர் மோதியது. இத‌ி‌ல் வேனில் இருந்த ஐந்து பேர் நசுங்கி இறந்தனர். ஜெகநாதன் மட்டும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஈரோடு தீயணைப்பு துறையினர் வேன் கதவுகளை உடைத்து உடல்களை மீட்டனர். அரசு பேரு‌ந்து ஓ‌ட்டுன‌ர் சரவணகுமார் தப்பி விட்டார். இது குறித்து ஈரோடு காவ‌ல்துறை‌யின‌ர் விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்