சென்னையி‌லிருந்து மதுரை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இய‌க்க‌ம்!

Webdunia

புதன், 19 டிசம்பர் 2007 (10:24 IST)
கி‌‌‌‌‌றி‌ஸ்ம‌ஸ் ப‌ண்டிகையையொ‌ட்டி ர‌யி‌ல்க‌ளி‌ல் டி‌க்கெ‌ட்டி இ‌ல்லாததா‌ல் தெ‌ற்கு ர‌யி‌ல்வே ‌சிற‌ப்பு ர‌யி‌ல்களை இய‌க்‌கி உ‌ள்ளது. அத‌ன்படி சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி‌க்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரையில் இருந்து இன்று, (19ஆ‌ம் தே‌தி) இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 0606) நாளை காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இதே போல் சென்னையில் இருந்து மதுரைக்கு நாளை (20ஆ‌ம் தே‌தி) இரவு 8.15 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 0605) புறப்படும். இந்த ரயில் அடுத்தநாள் காலை 6.30 மணிக்கு மதுரையை சென்றடையும்.

இதே போல், 21ஆ‌ம் தேதி இரவு 11 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 0604) மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். சென்னை எழும்பூரில் இருந்து 24ஆ‌ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 0603) மறுநாள் அதிகாலை 4 மணிக்கு மதுரைக்கு சென்று சேரும்.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 22ஆ‌ம் தேதி சிறப்பு ரயில் (எண் 0609) இயக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து 23ஆ‌ம் தேதி இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 0610) மறுநாள் காலை 11.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (19ஆ‌ம் தே‌தி) துவங்குகிறது.

கிறிஸ்துமஸ் தினத்தன்று, தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்களும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படுவதை போல ஒரு ஷிப்டு மட்டுமே இயக்கப்படும் எ‌ன்று தெ‌ற்கு ர‌யி‌ல்வே தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்