கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரவாணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் சென்னையில் நடைபெற்ற அரவாணிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த கூட்டத்தில் அரவாணிகள் பேசுகையில், சமூக அந்தஸ்துக்காக 45 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இன்றுவரை பலன் கிடைக்கவில்லை. அரவாணி என்றாலே செக்ஸில் ஈடுபடுபவர்கள் என்ற தவறான கண்ணோட்டம் உள்ளது.
எங்களை குடும்பத்தினர் வெறுத்து ஒதுக்குவதால் பள்ளி, வீட்டை விட்டு வெளியேறுகிறோம். பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதால் செக்ஸ் தொழிலுக்கு கட்டாயமாக தள்ளப்பட்டுகிறோம். பேருந்தில் கூட ஆண்கள் வரிசையில் அமர்ந்தால் கேலி செய்கிறார்கள். பெண்கள் வரிசையில் உட்கார்ந்தால் அருவருப்பாக பார்க்கின்றனர். வாடைக்குக் கூட வீடு கொடுக்க மறுக்கிறார்கள். ஆயுள் காப்பீடு உள்ளிட்ட எந்த காப்பீடுகளுக்கும் நாங்கள் அருகதை கிடையாது. மருத்துவ வசதி கூட எங்களுக்கு கிடைப்பதில்லை.
இந்த பிரச்சனைகளுக்கு முடிவுகட்ட அரவாணிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி, சிறப்பு மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அது போன்ற ஒரு சூழ்நிலையில் தான் அரவாணிகளுக்கு கவுரவமான வாழ்க்கை அமையும் என்று அரவாணிகள் தெரிவித்தனர்.