‌விடுதலை‌ப் பு‌‌‌லிகளு‌க்கு‌ தா‌‌ர்‌மீக ஆதரவு கொடு‌த்தா‌ல் கு‌ற்றமா? ‌திருமாவளவ‌ன் கே‌ள்‌வி!

Webdunia

ஞாயிறு, 16 டிசம்பர் 2007 (13:04 IST)
'ஈழ‌ம் ‌விடுதலை அடைய வே‌ண்டு‌ம், அ‌ங்கு‌ள்ள த‌மிழ‌ர்க‌ளு‌‌ம் ‌நி‌ம்ம‌தியாக வாழ வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக‌ப் போராடி வரு‌‌ம் ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌த் தா‌ர்‌மீக ஆதரவு கொடு‌த்தா‌ல் கு‌ற்றமா?' எ‌ன்று ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

'‌விடுதலை‌ப் பு‌லிகளை ஆத‌ரி‌ப்பவ‌ர்க‌ள் ‌திருமாவளவ‌ன் உ‌ள்‌ளி‌ட்ட யாராக இரு‌ந்தாலு‌ம் அவ‌ர்க‌ளி‌ன் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌த் த‌மிழக அரசு தய‌ங்க‌க் கூடாது' எ‌ன்று ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் இள‌ங்கோவ‌ன் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இத‌ற்கு‌க் கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள தொ‌ல்.‌திருமாவளவ‌ன், "மத்திய அமை‌ச்ச‌ர் இளங்கோவன் அவர் சார்ந்து‌ள்ள கட்சிக்கும், அவர் ஏற்று கொண்டிருக்கிற தலைமைக்கும் விசுவாசமாக இருக்கிறார். அது அவரது கடமை. விடுதலை சிறுத்தை அமை‌ப்பை பொறுத்த வரை இத்தகைய விமர்சனங்களையும், அல்லது அரசியல் சதிகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது" எ‌ன்றா‌ர்.

"இந்தியாவில் விடுதலைபபுலிகள் மீதான தடை கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிந்து விட்டது. அதை மறுபடியும் நீட்டிக்கத்தான் தமிழ்நாட்டில் விடுதலைபபுலிகள் நடமாட்டம் இருப்பதாக மத்திய உளவுபபிரிவு அதிகாரிகள் (ஐ.பி.) சில சதி வேலைகளை செய்கிறார்கள் தமிழக கியூ பிரிவுக்கும் பல தகவல்களை திரித்து சொல்கிறார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு தார்மீக ஆதரவு குரல் எழுப்பும் விடுதலை சிறுத்தைகளை இதனால் குறி வைக்கிறார்கள்.

நாங்கள் மறைமுகமாகவோ, நேரடியாகவோ விடுதலைப் புலிகளுடன் எந்தவித தொடர்பும் வைத்திருக்கவில்லை. தார்மீக ஆதரவு குரல் கொடுப்பது குற்றமா? விடுதலைப் புலிகளுக்கு பொருள் உதவியோ, அல்லது அவர்களுக்கு தேவையான வேறு உதவிகளையோ நாங்கள் செய்வது கிடையாது.

ஈழம் விடுதலை அடைய வேண்டும், அங்குள்ள தமிழர்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்று தார்மீக ஆதரவு குரல் கொடுப்பது தவறு அல்ல.

விடுதலைப் புலிகள் என்ற வார்த்தையை கூட தமிழ்நாட்டில் பேசக் கூடாது என்பது உலகத்திலேயே இல்லாத அடக்குமுறை என்றுதான் சொல்ல வேண்டும்.அஞ்சலி செலுத்த, கூடாது, இரங்கல் தெரிவிக்க கூடாது என்று காங்கிரசார் சொல்வது கொடுமையிலும் கொடுமை. இது வெட்கக் கேடானது.

இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்களை பார்த்து வாயளவில் தார்மீக ஆதரவு குரல் கொடுப்பது கூட தவறு என்றால் அதை எப்படி ஏற்பது?" எ‌ன்றா‌ர் ‌திருமாவளவ‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்