இச்சம்பவம் தொடர்பாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறையினரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இது தொடர்பாக நடத்தப்படும் கோட்ட வருவாய் அலுவலர் (ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது வெறும் கண்துடைப்பு. இவ்வழக்கில் உண்மையை நிலையை கண்டறிய கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கை குழு தமிழக அரசை வலியுறுத்த உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை கோரி வணிகர் சங்க பேரவையின் சார்பில் டிசம்பர் 20ஆம் தேதி சென்னையில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். அதன் பின்னரும் எங்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் டிசம்பர் 31ஆம் தேதி காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். இது தொடர்பாக முதலமைச்சரை சந்திக்க இருக்கிறோம் என்று வெள்ளையன் கூறினார்.