ஓ‌ட்ட‌ல் அ‌திப‌ர் ராஜகோபா‌ல் வழ‌க்‌கை ‌விசா‌ரி‌க்கு‌ம் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌திகளு‌க்கு ‌மிர‌ட்‌ட‌ல் கடித‌ம்!

Webdunia

சனி, 15 டிசம்பர் 2007 (10:28 IST)
ஓ‌ட்ட‌ல் அ‌திப‌ர் ராஜகோபா‌ல் வழ‌க்கை ‌விசா‌ரி‌க்கு‌ம் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌திகளு‌க்கு ‌‌‌மிர‌ட்‌ட‌ல் கடித‌ம் வ‌ந்ததையடு‌த்து ‌நீ‌திப‌திக‌ள் வழ‌க்கை ‌விசா‌ரி‌க்க மறு‌த்து ‌வரு‌கி‌‌ன்றன‌ர்.

ஜீவஜோதியின், கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தி கொலை செய்யப்பட்டது தொட‌ர்பாக ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்பட பலர் மீது வழக்கு தொடரப்பட்டது. இ‌ந்த வழ‌‌க்கை ‌விசா‌ரி‌த் பூந்தமல்லி அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌ம், கட‌த்‌த‌ல் வழ‌க்‌கி‌ல் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு ‌சிறையு‌ம், அபராதமும் விதி‌‌த்தது. ஆனா‌ல் கொலை வழக்கிலிருந்து இவர் விடுதலை செய்யப்பட்டார்.

சிறை தண்டனையை எதிர்த்து ராஜகோபால், சென்னை உய‌‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அப்பீல் செய்தார். கொலை வழக்கிலிருந்து ராஜகோபா‌ல் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசு சார்பில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்த அப்பீல் வழக்குகள் நீதிபதிகள் டி.முருகேசன், கே.என்.பாஷா ஆகியோர் முன்னிலையில் சில வாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த வழக்கை விசாரிக்க இயலாது என்று கே.என்.பாஷா கூறிவிட்டார். எனவே, இந்த வழக்கு நீதிபதிகள் பி.டி.தினகரன், ஆர்.ரகுபதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இவர்கள் இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று "மொட்டை'' கடிதம் வந்ததால், இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.

இறுதியாக இந்த வழக்கு நீதிபதிகள் டி.முருகேசன், வி.பெரியகருப்பையா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கை விசாரிக்க மாட்டோம் என்று நீதிபதி டி.முருகேசன் தெரிவித்தார். அ‌ப்போது அவர் கூறுகை‌யி‌ல், இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க கூடாது என்று எங்களுக்கு கடிதங்கள் வந்துள்ளன. மூத்த நீதிபதியான எனக்கு மட்டும் வரவில்லை. 3 வாரத்திற்கு முன்புதான் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி பெரியகருப்பையா மீதும் அவதூறு கூறப்பட்டுள்ளது. நாங்களும் மனிதர்கள் தான். எங்களுக்கு குடும்பம் உள்ளது. அவர்களை நாங்கள் பாதுகாக்க வேண்டியுள்ளது.

எங்கள் வழ‌க்க‌றிஞ‌ர் தொழிலை தியாகம் செய்து விட்டுதான் இந்த பணிக்கு வருகிறோம். இதுபோன்று கடிதங்கள் வருவது நீதித்துறைக்கே சரியானதல்ல. இதுபோன்ற கடிதங்கள் வந்திருப்பதால் சுதந்திரமான, மன நிறைவுடன் இந்த வழக்கை எங்களால் விசாரிக்க முடியாது. ஆகவே, இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு அனுப்புகிறோம். இதுபோன்று நிறைய நீதிபதிகளுக்கு கடிதம் வந்துள்ளன. இதே நிலை நீடித்தால் நாங்கள் மட்டுமல்ல, எந்த நீதிபதியும் இந்த வழக்கை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் விசாரிக்கமாட்டார்கள் எ‌ன்று ‌நீ‌திப‌தி முருகே‌ச‌ன் உரு‌க்க‌த்துட‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்