காவ‌ல் ‌விசாரணை‌யி‌ல் மரண‌ம் கு‌றி‌த்து ‌நியாயமான ‌விசாரணை: காவ‌‌ல்துறை ஆணைய‌ர் உறு‌தி!

வெள்ளி, 14 டிசம்பர் 2007 (11:46 IST)
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தே‌னீ‌ரகடை உரிமையாளர் மரண‌ம் அடை‌ந்தது தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படும் என்று காவ‌‌ல்துறஆணைய‌ர் நாஞ்சில் குமரன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுபற்றி அவர் செ‌ய்‌தியாள‌‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், வடபழனியில் காவ‌ல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தே‌‌னீ‌ரகடை உரிமையாளர் சையத் அலி உ‌யி‌ரிழ‌‌ந்தது தொடர்பாக வருவா‌யகோ‌ட்டா‌ச்‌சிய‌ர் விசாரணை நடந்து வருகிறது. சட்டபூர்வமாநியாயமான முறையில் விசாரணை நடத்தப்படும்.

நொளம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட ‌ச‌ம்பவ‌ம்வு தொடர்பாக முக்கிய துப்பு கிடைத்துள்ளது. ஒருவர் மீது சந்தேகப்படுகிறோம்.

அந்தக் குடியிருப்பில் கட்டட வேலை நடந்து வந்தது. அச்சமயத்தில் 16 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் கொலை நடந்துள்ளது. இதுபற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்