காற்றழுத்த தாழ்வு ‌‌நிலை :கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்

வெள்ளி, 14 டிசம்பர் 2007 (10:59 IST)
வங்கக்கடலில் தென்மேற்கு பகு‌தி‌யி‌ல் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு ‌நிலையா‌ல் தமிழக‌த்‌தி‌ன் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலு‌ம், அ‌வ்வ‌ப்போது பலமான கா‌ற்று‌ம் ‌வீச‌க்கூடு‌ம் எ‌ன்பதா‌ல், மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எ‌ச்ச‌ரி‌க்கை கொடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு ‌நிலையா‌ல் சென்னை ம‌ற்று‌ம் அத‌ன் சு‌ற்றுவ‌ட்டார‌ப் பகு‌திக‌ளி‌ல் நே‌ற்று‌ம், இ‌ன்று‌ம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பல‌ப் பகு‌திக‌ளி‌ல் லேசான மழைத்தூறல் இருந்தது.

இ‌ந்‌நிலை‌யி‌ல் இன்‌று சென்னை மற்றும் த‌மிழக‌த்‌தி‌ன் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அ‌தி‌ல், இலங்கைக்கு கிழக்கே தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது தற்போது தீவிரமடை‌ந்து‌ள்ளது. அது மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது.

இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும். அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வா‌ய்‌ப்பு‌ள்ளது எ‌ன்று

வெப்துனியாவைப் படிக்கவும்