மலேசியாவில் ஒற்றுமையை சீர் குலைக்க முயற்சி: டத்தோ ராஜூ!

Webdunia

வியாழன், 13 டிசம்பர் 2007 (16:45 IST)
மலே‌சியா‌வி‌ல் ஒ‌ற்றுமையை ‌சீ‌ர் குலை‌க்க ‌ஒரு சிறு கு‌ம்ப‌ல் முய‌ற்‌சி‌க்‌கிறது எ‌ன்று த‌‌மிழரு‌ம் மலே‌சிய க‌ல்வ‌ி அமை‌ச்சருமான ட‌த்தோ ராஜூ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

மலேசிய நாட்டின் பராக் மாநிலத்தின் முதலமை‌ச்ச‌ர் ராஜா தலைமையில் ஒரு குழு சென்னை வந்துள்ளது. இதில் த‌மிழரு‌ம், கல்வி அமை‌ச்சருமான டத்தோ ராஜூ ம‌ற்று‌ம் க‌ல்வ‌ி ‌நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர். பராக் மாநிலத்தில் புதிதாக பல்கலைக்கழகம் அமைக்க உள்ளனர். இதனை அமைப்பது என்பது தொடர்பாக சென்னையில் 2 நாள் தங்கியிருந்து ஆய்வு நடத்துகிறார்கள்.

சென்னை விமான நிலையத்தில் மலே‌சிய க‌ல்வ‌ி அமை‌ச்ச‌ர் டத்தோ ராஜூ செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், மலேசியாவில் தமிழர்கள், இலங்கை மக்கள், மலேசியர்கள் என பல தரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். ஆனால் அங்கு இந்து சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் தவறான முறையில் பிரசாரம் செய்கிறார்கள். மலேசிய சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி சொன்னது சரியானது அல்ல.

எல்லா நாடுகளிலும் ஏற்றத் தாழ்வு உண்டு. இந்தியாவில் கூட ஏற்றத்தாழ்வு இருக்கிறது. அதே போலத்தான் மலேசியாவிலும் இருக்கிறது. இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த ஒற்றுமையை சீர் குலைக்க சிறு கும்பல் முயற்சிக்கிறது. கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். மலேசியா சுதந்திரம் அடைந்தபோது ஏற்படுத்திய ஒப்பந்தத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அமுல்படுத்தும்படி வற்புறத்துகிறார்கள். அது சரியானது அல்ல எ‌ன்று ட‌த்தோ ராஜூ கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்