காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், தாங்கள் இதுபோன்று மேலும் பல பிறந்த நாள்களை காண வாழ்த்துகிறேன். நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க தாங்கள் மிக முக்கிய பங்கு ஆற்றுகிறீர்கள்.
பல்வேறு குறிப்பிடத்தக்க மற்றும் வரலாற்று சாதனைகளை படைத்து வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தாங்கள் தலைமை வகிக்கிறீர்கள். இந்திய ஜனநாயகத்திற்கு தியாகம் செய்வதில் தாங்கள் ஒரு முன்மாதிரியாக விளங்குகிறீர்கள். வளர்ச்சி, செழிப்பு மற்றும் அமைதியின் பாதையில் நாட்டை மேலும் முன்னெடுத்து செல்ல தாங்கள் மகிழ்ச்சியுடனும், நல்ல உடல் நலத்துடனும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.