கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நாராயணசாமி, மாருதி, கேசு, லோகேஷ்கண்ணா ஆகியோர் தங்கள் குழந்தைகள் 4 பேருடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று விட்டு இன்று அதிகாலை காரில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். காரை லோகேஸ் என்பவர் ஓட்டிச் சென்றார். கார் இன்று அதிகாலை 5 மணிக்கு கோவை அருகே உள்ள திருச்சி ரோடு எல் அன் டி பைபாஸ் ரோடு பட்டணம் பகுதியில் வந்து கொண்டு இருந்தது.
அதிகாலை நேரம் என்பதால் காரில் இருந்த அய்யப்ப பக்தர்கள் 8 பேரும் தூங்கி கொண்டு இருந்தனர். டிரைவர் லோகேஸ் தூக்க மயத்தில் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது ஆந்திராவில் இருந்து கோவையை நோக்கி மிளகாய் ஏற்றி வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் காரில் இருந்த ஐயப்ப பக்தர்கள் நாராயணசாமி, மாருதி, கேசு, லோகேஷ்கண்ணா, டிரைவர் லோகேஷ் ஆகிய 5 பேர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.