மேட்டூர் அருகே வாயுக் கசிவு : 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Webdunia

வெள்ளி, 7 டிசம்பர் 2007 (14:22 IST)
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள காஸ்டிக் சோடா தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட குளோரின் வாயுக் வெளியேற்றத்தால் பாதிக்கப்பட்டு 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!

மேட்டூர் அணைக்கு அருகே உள்ள ரெட்டைபுளியமருதூர் என்ற இடத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையில் இருந்து குளோரின் வாயு வெளியேறியதனால் அந்த தொழிற்சாலைக்கு அருகில் உள்ள சிப்பம்பட்டி, குஞ்சடியூர், ராம் நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வாந்தி, கண் எரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர்.

இத்தகவல் அறிந்ததும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சேகர், சேலம் மண்டல தீயணைப்புத் தலைமை அதிகாரி டேவிட் வின்சென்ட், மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் அசோக்குமார் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

கண் எரிச்சல், வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த வெடி உப்பு தொழிற்சாலை, கெம்ப்ளாஸ்ட் சன்மார்க் தொழிற் குழுமத்தைச் சேர்ந்ததாகும். தொழிற்சாலையில் இருந்து நச்சு வாயு வெளியேறி உள்ளது என்று இரண்டு பேர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்