தர்மபுரி பேரு‌ந்து எரிப்பு வழக்‌கு : அ.இ.அ.‌தி.மு.க.‌வின‌ர் 3 பேரு‌க்கு தூ‌க்கு‌ உறு‌தி!

Webdunia

வியாழன், 6 டிசம்பர் 2007 (12:18 IST)
தர்மபுரி பேரு‌ந்தஎரிப்பு வழக்கில் அ.இ.அ.‌ி.ு.க.‌வின‌ர் 3 பேரு‌க்கு ‌கீ‌ழ் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌வி‌தி‌த்தூக்கு தண்டனையசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌மஇ‌ன்றஉறு‌தி செ‌ய்தது.

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தர்மபுரியில் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேரு‌ந்ததீவைத்து கொளுத்தப்பட்டது. இதில், கோ‌கிலவா‌ணி, ஹேமலதா, காய‌த்‌‌ரி ஆ‌கிய 3 மாணவிகள் உ‌யிரோடஎ‌‌ரி‌த்து‌ககொ‌ள்ள‌ப்ப‌ட்டன‌ர். இ‌ச்ச‌‌ம்பவ‌ம் 2000ஆ‌ம் ஆ‌ண்டு நடைபெ‌ற்றது.

இந்த வழ‌க்‌கி‌லகுற்றம்சாட்டப்பட்ட நெடு (எ) நெடுஞ்செழியன், ம‌தி (எ) ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், முன்னாள் ஒன்றிய அ.இ.அ.தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் உட்பட 25 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் சேல‌ம் ‌கூடுத‌ல் நீ‌திம‌ன்நீதிபதி கிருஷ்ணராஜா தீர்ப்ப‌ளி‌த்தா‌ர்.

இ‌ந்த‌ண்டனையஎ‌தி‌ர்‌த்து 28 பேரு‌மசென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதன் மீதான வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளவாதம் கடந்த மாதம் 19ஆ‌மதேதி முதல் 22ஆ‌‌மதேதி வரை நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு டிச‌‌ம்ப‌ர் 6ம் தேதி வழங்கப்படுமென ‌நீ‌திப‌திக‌ளஅ‌றி‌வி‌த்‌திரு‌ந்தன‌ர்.

அத‌ன்படி இ‌ன்று ‌நீ‌‌திப‌திக‌ளமுருகேச‌ன், பெ‌ரியகரு‌‌ப்பையா ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர். அ‌ப்போது, அ‌ப்போது, கீழ் ‌நீ‌திம‌ன்ற‌மவழங்கிய 3 பேரினதூக்குத்தண்‌டனையஉறுதி செய்தது. மேலும், இச்சம்பவத்திலதொடர்புடைய 25 பேரினசிறதண்டனையையுமசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஉறுதி‌ப்படு‌த்‌தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்