சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 கூடுதல் நீதிபதிகள், நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு நாளை மறுதினம் (7ஆம் தேதி) தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக ஏ.சி.ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன், பி.முருகேசன், எஸ்.தமிழ்வாணன், எம்.ஜெயபால் ஆகியோர் கடந்த 2005 டிசம்பர் 10ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களது இரண்டு ஆண்டு பதவி காலம் வரும் 9ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதைத் தொடர்ந்து, இந்த 4 கூடுதல் நீதிபதிகளும், நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் பிறப்பித்துள்ளார். இவர்கள் 62 வயது நிரம்பும் வரை இந்தப் பதவியில் நீடிப்பார்கள்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள அரங்கத்தில் வரும் 7ஆம் தேதி நடக்கும் விழாவில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா இவர்களுக்கு நிரந்தர நீதிபதிகளாக பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.