ராமதாஸை கண்டித்து போராட்டம்: பு‌திய த‌‌மிழக‌ம் கிருஷ்ணசாமி!

Webdunia

ஞாயிறு, 2 டிசம்பர் 2007 (13:25 IST)
மருத்துவ மாணவர்கள் மீதான மத்திய, மாநில அரசுகளின் அடக்கு முறையைக் கண்டித்து அன்புமணி, ராமதா‌ஸுக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டமும், ரயில் நிறுத்தப் போராட்டமும் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவோடு நடைபெறும் எ‌ன்ற புதிய தமிழகம் தலைவர் மரு‌த்துவ‌ர் கிருஷ்ணசாமி ‌அ‌றி‌வி‌‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக புதிய தமிழகம் தலைவர் மரு‌த்துவ‌ரகிருஷ்ணசாமி விடுத்துள்ள அறிக்கையில், மருத்துவ மாணவர்களை டிசம்பர் 3ஆ‌ம் தேதிக்குள் போராட்டத்தை கைவிடாவிட்டால் வகுப்பறையை விட்டு வெளியேற்றுவோம். விடுதிகளில் இருந்து விரட்டுவோம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஜனநாயக விரோதமானதாகும்.

மருத்துவ மாணவர்கள் மீதான மத்திய, மாநில அரசுகளின் அடக்கு முறையைக் கண்டித்து அன்புமணி, ராமதா‌ஸுக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டமும், ரயில் நிறுத்தப் போராட்டமும் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவோடு நடைபெறும். தமிழக அளவில் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

மத்திய அரசின் சட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் அமலாக்கப்பட்டாலும் தமிழக அளவில் மருத்துவ மாணவர்களின் படிப்பு 6 ஆண்டு காலமாக உயர்த்தப்பட மாட்டாது என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் எ‌ன்று பு‌திய த‌மிழக‌ம் தலைவ‌ர் மரு‌த்துவ‌ர் க‌ிரு‌‌ஷ்ணசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்