மருத்துவக் கல்லூரி மாணவர்களை போராட தூண்டி விடுகிறார் என்ற பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாசின் குற்றச்சாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் மருத்துவக் கல்லூரி மாணவர்களை போராட தூண்டி விடுகிறார் என்றும், போராடி வரும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தருவது தவறு என்றும் பேட்டி அளித்த போது கூறியிருக்கிறார். மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயில வேண்டிய கால அளவை ஐந்தரை ஆண்டுகளாக இருந்ததை கிராமப்புற சேவைக்காக மேலும் ஓர் ஆண்டு நீடிக்கும் என்ற அறிவிப்பை ஏற்க மறுத்து மாணவர்கள் அறவழிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரிக்கிறது.
மாணவர்களின் ஐயங்களைப் போக்கி, சுமூகத் தீர்வுக்கு நடுநிலையில் நின்று சிந்திக்க வேண்டிய மருத்துவர் ராமதாஸ், மாணவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதை பாமக வுக்கு எதிரான போராட்டம் எனக் கருதுவதும், இதையே மருத்துவர் அன்புமணிக்கு எதிரான போராட்டம் என வர்ணிப்பதும், வலிந்து குற்றம் சாட்ட முயலும் காரியம் என சுட்டிக் காட்ட விரும்புகிறோம். பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டிற்காக பாமக குரல் கொடுப்பதை ஆதரித்து வரவேற் றுள்ளோம். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு பயிரிடப்படும் நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்பதில் ஒரே நோக்கில், ஒரே குரலில் பேசுகிறோம்.
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்புக் காலத்தை நீடிப்பதால் ஏற்படக் கூடிய செலவு, மேற்படிப்பிற்கும் ஓராண்டு தள்ளிப்போடப்படுதல் என்பதை மாணவர்கள் ஏற்க மறுக்கின்றனர். 1 லட்சத்து 75 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட இந்திய மருத்துவர் சங்கமும் இத்திட்டத்தைக் கைவிட்டு, கிராமப்புற சேவைக்கு பயிற்சி பெற்ற நிரந்தர மருத்துவர் களை நியமிக்க கேட்டுள்ளது.
கட்டாயப்படுத்தி உத்தரவு போட்டு செய்ய வைக்கும் முறை எங்கும் இல்லை. இந்தக் கோட்பாடு மாணவர் களுக்கும் பொருந்தும். கிராமப்புற மக்களுக்கான மருத்துவ சேவையில் அக்கறை காட்டுவதற்காக மருத்துவர் அன்புமணியை பாராட்டுகிறோம். கிராமப்புற மக்களுக்கு உதவக்கூடிய வகையில் மருத்துவ சேவை அமைய வேண்டுமானால் பயிற்சி பெற்ற மருத்துவர்களை நிரந்தரமாக நியமிக்க வும், அவ்வாறு சேவைக்கு முன்வரும் மருத்துவர்களுக்கு சிறப்பு ஊதியம், சிறப்புச் சலுகைகளை வழங்கலாம் என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.