ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எம்.எல்.ஏ. வை கண்டித்து வருவாய்துறையினர் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்க அலுவலகத்திற்கு சத்தியமங்கலம் எம்.எல்.ஏ. எல்.பி.தர்மலிங்கம் நேற்று காலை சென்றார். அப்போது அங்கு உள்ள பொதுமக்களிடம் வருவாய் துறை இளநிலை உதவியாளர் பானுப்பிரியா முரட்டுத்தனமாக நடந்துள்ளார்.
இதனால் பானுப்பிரியாவை எம்.எல்.ஏ., தர்மலிங்கம் பொதுமக்களிடம் கனிவாக பேசுமாறும் அவர்களின் சந்தேகங்களுக்கு உரிய முறையில் விளக்கமளிக்கவும் கூறி கண்டித்துள்ளார். இதனால் சக ஊழியர்களிடம் பானுப்பிரியா புகார் கூறினார். இதனால் எம்.எல்.ஏ. தர்மலிங்கத்தை கண்டித்து தாசில்தார் உட்பட வருவாய்துறையினர் வெளிநடப்பு செய்தனர்.
பின் சத்தி காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். மாலையில் ஆர்பட்டம் நடத்தினர். எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்டம் முழுவதும் இன்று வருவாய்துறை அதிகாரிகள் வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் பிரதநிதிகள் தெரிவித்தனர்.