சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்ககோரி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னை மெமோரியல் வளாகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 45 நீதிபதிகளில் 5 பேர் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள். மேலும் நான்கு இடங்களுக்கு இரண்டு பேரை சிபாரிசு செய்ததில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இல்லை. நீதிபதிகள் நியமனத்திலும் பாரபட்சம் இருக்கிறது. இதனை போக்க வேண்டும்.
நீதிபதிகளை நியமிக்க சிபாரிசு செய்யும் குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதி ஒருவர் கூட இல்லை. சட்டத்தின் முன்பு எல்லோரும் சமம். எல்லோருக்கும் பாதுகாப்பு தேவை என்றால் சமூக நீதி இருக்க வேண்டும். இதே போல் உச்ச நீதிமன்றத்திலும் தமிழர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் தேவை. அதுவரை போராட்டம் தொடரும் என்று கி.வீரமணி கூறினார்.