மருத்துவ படிப்பை ஐந்தரை ஆண்டில் இருந்து ஆறரை ஆண்டாக மத்திய அரசு உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உட்பட தமிழகத்தில் 13 இடங்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அ.இ.அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார். வடசென்னை மாவட்ட செயலாளர் சேகர்பாபு, தென்சென்னை மாவட்ட செயலாளர் கலைராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், செந்தமிழன், விஜயகுமார் உள்டப ஏராளமான அ.இ.அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.