மத்திய அமைச்சர் இளங்கோவனுக்கு தொடரும் எதிர்ப்பு

செவ்வாய், 27 நவம்பர் 2007 (10:49 IST)
மத்திய ஜவுளி துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஈரோடு மற்றும் சேலம் பகுதியில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை ஈரோடு மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் வாகனங்களில் வந்திருந்தனர். கூட்டத்திற்கு மத்திய ஜவுளி துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கிபேசினார்.

அப்போது இலங்கை ராணுவத்தால் கொலைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் அரசியல் அமைப்பு செயலாளர் தமிழ்செல்வன் மறைவிற்கு முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கவிதையை மறைமுகமாக விமர்சித்தார். இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கிடு தேனீர் கடை அருகில் தி.க., சார்பாக தமிழ்செல்வனுக்கு அஞ்சலி பலகை வைக்கப்பட்டிருந்தது.

கூட்டம் முடிந்து திரும்பிய காங்கிரஸ் கட்சியினர் மூன்று டாடா சுமோ வாகனத்தில் சென்று அஞ்சலி பலகையை கிழித்து எரிந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் இவர்களை சுற்றிவளைத்து விசாரித்தபோது மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சொற்படி இந்த சம்பவம் நடந்ததாக புகார் கூறப்பட்டது.

பின் காவ‌ல்துறை மற்றும் மாநில கைத்தறிதுறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரச்சனையை கைவிடும்படி கூறியதாலும் அந்த பிரச்சனை அப்போதைக்கு கைவிடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்று‌க் கிழமை ஈரோட்டில் இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவபொம்மையை ூக்கிட்டு ஒரு கோஷ்டியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த செயலலை கண்டித்து மொடக்குறிச்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பழனிசாமி தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின் பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டது. இதேபோல் சேலத்திலும் இளங்கோவன் உருவபொம்மையை ூக்கிட்டனர். இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியிலேயே மத்திய அமைச்சர் வாசன் கோஷ்டியினர் இந்த செயலுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட‌த்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்