தமிழீழ போராட்டத்தில் மறைந்த தலைவர்களுக்காக நடக்கும் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் இன்று தென்னாப்பிரிக்கா சென்றார்.
சிங்கள ராணுவதாக்குதலில் வீர மரணம் அடைந்த விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் இரங்கல் கூட்டம் நடத்தி வருகிறார்கள். வரும் 27ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன், ஜோகன்ஸ் பர்க் நகரங்களில் மாவீரர்கள் தினமும், தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கூட்டமும் நடக்கிறது.
இதில் தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக அவர் நேற்று சென்னையில் இருந்து தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.
தென்னாப்பிரிக்காவில் அவர் தங்கியிருக்கும் போது அங்கு ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்களுடன் ஈழ போராட்டம் குறித்து பேச்சு நடத்துவார் என தெரிகிறது.