முத‌ல் மாவ‌ட்டமாக அரியலூர் வரவே‌ண்டு‌ம்: மு.க.ஸ்டாலின்!

Webdunia

சனி, 24 நவம்பர் 2007 (09:59 IST)
''தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக அ‌ரியலூ‌ர் மாவட்டம் வர வேண்டும் என்று உங்களைப் போலவே நானும் விரும்புகிறேன். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை'' எ‌ன்று உ‌ள்ளா‌‌ட்‌சி‌‌த்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூ‌றினா‌ர்.

தமிழக‌த்‌தி‌ல் 30 மாவட்டங்கள் ஏ‌ற்கனவே இருந்தன. ‌நி‌ர்வாக வச‌தி‌க்காக பெரம்பலூர் மாவட்டத்தை 2-ஆக பிரித்து அரியலூர் மாவட்டம் உருவாக்கப்படும் என்று முலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய அரியலூர் மாவட்ட தொடக்க விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. விழாவில், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய அரியலூர் மாவட்டத்தை தொடங்கி வைத்து பேசுகை‌யி‌ல், பல ஆண்டு கால கனவாக இருந்து வந்த புதிய அரியலூர் மாவட்டம் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு‌ள்ளது.

தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக இந்த மாவட்டம் வர வேண்டும் என்று உங்களைப் போலவே நானும் விரும்புகிறேன். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த மாவட்டத்தில் அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும், அரியலூர் செந்துறை, ஜெயங்கொண்டம் என்ற வட்டங்களும் 6 ஊராட்சி ஒன்றியங்களும் 2 நகராட்சிகளும், 2 பேரூராட்சிகளும் உள்ளது.

மத்திய அமைச்சர் ராசா, பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்த அளவிலேயே சட்டமன்ற தொகுதிகள் இருப்பதாக கூறினார். இந்த குறையை போக்குவதற்காக பெரம்பலூரில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். ராசா சொன்னால் கலைஞர் தட்ட மாட்டார்.

3-ம் கட்டமாக நவ‌ம்ப‌ர் 27ஆ‌ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் முதலமைச்சர் கலைஞர் 30 லட்சம் இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌‌ட்டிக‌ள் வழங்கும் திட்டத்தைதொடங்கி வைக்கிறார். அன்று எல்லா மாவட்டங்களிலும் அமைச்சர்கள் இலவச வ‌ண்ண‌ததொலை‌க்கா‌ட்‌சி பெ‌‌ட்டிகளை வழங்குவார்கள்.

இந்த வ‌ண்ண‌ததொலை‌க்கா‌ட்‌சி பெ‌‌ட்டிகளை கொள்முதல் செய்வதற்கு டெண்டர் விடப்பட்டதில் ரூ.160 கோடியை மிச்சப்படுத்தியதன் மூலம் கூடுதலாக 4 லட்சம் வ‌ண்ண‌ததொலை‌க்கா‌ட்‌சி பெ‌‌ட்டிகளும் வழங்கப்பட இருக்கிறது. இப்படி பல நல்ல திட்டங்களை நிறைவற்றி வரும் இந்த அரசிற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் ‌எ‌ன்று அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்