மு‌ல்லை‌ப் பெ‌ரியா‌‌‌றி‌ல் கேரள அரசு பு‌திய அ‌ணை க‌ட்ட முடியாது: துரைமுருகன்!

Webdunia

சனி, 24 நவம்பர் 2007 (10:28 IST)
`மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு அணை‌யைப‌் போ‌ல் பு‌திதாக ஒரு அணையை கேரள அரசு க‌ட்ட முடியாது. அத‌ற்கு பல காரண‌ங்‌க‌ள் உ‌ள்ளன எ‌ன்று த‌மிழக பொது‌ப் ப‌ணி‌த்துறை அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன் கூ‌றினா‌ர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருக‌ன் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டும் விவகாரத்தில் வருகிற பிப்ரவரி 16 அல்லது 18ஆ‌ம் தேதி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் அடுத்த விசாரணை நடக்க உள்ளது. ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு தடைஉத்தரவு வழங்குவது பற்றி டெல்லியில் வழ‌க்க‌றி‌ஞ‌ர் பராசரனிடம் ஆலோசனை நடத்திவிட்டு வந்திருக்கிறேன். ஆந்திர அரசு விரைவில் அடிக்கல் நாட்ட இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு முன்பே தடை உத்தரவு பெறவேண்டும் என்று வழ‌க்க‌றிஞ‌‌ரிட‌ம் பேசி இருக்கிறேன்.

முல்லை பெரியாறு அணையைப்போல் புதிதாக ஒரு அணையை கேரள அரசு கட்ட இருப்பதாக அறிவித்து இருக்கிறார்கள். இதற்காக ஒரு அலுவலகத்தையும் கேரள அரசு கட்டியிருப்பதாக சொல்கிறார்களே? எ‌ன்று துரைமுருக‌னி‌ட‌ம் கே‌ட்ட போது, அலுவலகத்தை கட்டிவிட்டால் அணை கட்டிவிட முடியுமா? கேரள அரசு புதிய அணையை கட்ட முடியாது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அணை கட்டுவதற்கு பல சட்டதிட்டங்கள் உள்ளன. எந்த ஒரு மாநிலமும் சட்டத்தின் மூலம் தான் அணையை கட்ட முடியும். எனவே கேரள அரசால் புதிதாக அணை கட்ட முடியாது. சமீபத்தில் கேரள மந்திரி, அங்குள்ள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுக்குள் போக முடியாமல் திரும்பியிருக்கிறார் எ‌ன்று துரைமுருக‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்